மகன் இறந்த துக்கத்தில் தம்பதியினர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கலங்கல் பகுதியில் சத்யராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சரண்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஷியாம் என்ற மகன் இருந்துள்ளான். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஷியாம் டெங்கு காய்ச்சல் காரணமாக இறந்துவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த சத்யராஜ் மற்றும் சரண்யா ஆகிய 2 பேரும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தம்பதியினரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மகன் இறந்த துக்கம் தாங்காமல் சரண்யாவின் பிறந்தநாளன்று தம்பதியினர் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.