Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திருமணமான 3 மாதத்தில்…. செவிலியர் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

திருமணமான 3 மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்திலுள்ள சிறுகனூர் பகுதியில் டேனியல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெல்சி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்புதான் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இதில் பெல்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பெல்சி விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக பெல்சியை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பெல்சி பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பெல்சி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |