இயக்குனர் எச். வினோத் வலிமை படம் குறித்து அளித்துள்ள பேட்டி தற்போது இணையதளத்தில் வைரலாக பரவுகிறது.
தமிழ் சினிமாவின் அல்டிமேட் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகர் அஜித். இவர் ‘நேர்கொண்ட பார்வை’ என்ற படத்தின் வெற்றிக்கு பிறகு, இரண்டாவது முறையாக எச். வினோத் இயக்கியுள்ள வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் ரசிகர்கள் இந்த படத்தின் ரிலீசுக்காக வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது மீண்டும் தனது அஜித்-61 வது படத்தில் இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
இதனையடுத்து வருகிற பிப்ரவரி 24ஆம் தேதி உலகம் முழுக்க வலிமை படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் மட்டுமல்லாமல் உலகின்பல நாடுகளிலும் வெகு விமர்சையாக இந்த படம் வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து வலிமை படத்தின் வெளியீட்டை ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாட தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் இப்படம் குறித்து இயக்குனர் வினோத் கூறியதாவது, நடிகர் அஜித் என்னிடம், இந்த படத்தில் நடித்ததற்காக நான் பெருமை அடைகிறேன் என்றும் இந்த படத்தில் நடித்த பிறகு தான் நான் ஒரு பெருமைக்குரிய மகனாக என் அப்பா, அம்மா மற்றும் என் குடும்பத்தாருக்கு இந்த படத்தை திரையிட்டுக் காட்டப் போவதாக அஜித் கூறினார். அதற்கு அவர்களின் ரியாக் ஷனை பொருத்து தான் இந்தி, தெலுங்கு, கன்னடம் என மற்ற மொழிகளில் பிரமாண்டமாக படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாக கூறினார்.
மேலும் இந்த படம் அதிரடி படம் அல்ல, பல சமூக பிரச்சனைகளை சொல்லும் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம். எனவே குடும்பத்தோடு அனைவரும் சேர்ந்து பார்க்க வேண்டிய படமாக இருக்கும் என வினோத் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.