Categories
உலக செய்திகள்

மோசமான வானிலை…. விமான சேவைகள் ரத்து…. அறிவித்த பிரபல நாடு….!!!

ஜப்பானில் மோசமான வானிலை நிலவுவதால் விமான போக்குவரத்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஜப்பானில் மோசமான வானிலை நிலவுகிறது. மேலும் ஜப்பானில் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பலத்த காற்று மற்றும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இது திங்கள் கிழமை அன்று ஹோக்கைடோவில் வினாடிக்கு 138 அடி வேகத்தில் காற்று வீசியுள்ளது. மேலும் மூன்று மணி நேரத்தில் 9 அங்குலங்கள் வரை பணி விழுந்துள்ளது. இதனை அடுத்து தீவின் தலைநகரான சப்பொரோ நகரம் உள்பட பல பகுதிகளில் பணியினால் 32 அங்குலமாக இருந்துள்ளது. இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் ஜப்பானின் வடக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் பனிப்பொழிவு ஏற்படலாம்.

இதனை தொடர்ந்து பனியினால் 19-27 அங்குலங்கள் வரை இருக்கும் என்று ஊடக செய்திகளில் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஹொக்கைடோ மாகாணத்தில் 683 ரயில்கள் மற்றும் 136 விமான போக்குவரத்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் நியூ சிஸ்டோஸ் விமான நிலையத்திற்கு வரும் விமானங்கள் மற்றும் புறப்படும் விமானங்களும், உள்ளூர் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Categories

Tech |