Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“என் குழந்தையை பார்க்கணும்” தீக்குளிக்க முயன்ற மாஸ்டர்…. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

சமையல் மாஸ்டர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டத்திலுள்ள காவல்காரன்பட்டியில் சமையல் மாஸ்டரான மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மணிகண்டனின் மனைவி அவரைவிட்டு பிரிந்து சென்றுவிட்டார். மேலும் மணிகண்டனின் குழந்தையை அவரது மனைவி காப்பகத்தில் ஒப்படைத்துவிட்டார். இதனால் மணிகண்டன் தனது குழந்தையை பார்ப்பதற்காக காப்பகத்திற்கு சென்றுள்ளார். ஆனால் மணிகண்டனை காப்பகத்தை சேர்ந்தவர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை.

இதனால் மன உளைச்சலில் இருந்த மணிகண்டன் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று உடல் முழுவதும் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் மணிகண்டனை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது காப்பகத்தில் இருக்கும் தனது குழந்தையை தன்னிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மணிகண்டன் கூறியுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |