Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி இராசிக்கு… “சுணங்கிய காரியம் சுறுசுறுப்பாக நடைபெறும்”.. மன தைரியம் கூடும்..!!

கன்னிராசி அன்பர்களே..!! இன்று போட்டிகளை சமாளிக்க வேண்டிய நாளாக இருக்கும். புதிய பாதை புலப்படும். சுணங்கிய காரியம் ஒன்று சுறுசுறுப்பாக நடைபெறும். பிள்ளைகள் உங்கள் பேச்சுக்கு மரியாதை கொடுப்பார்கள். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். இன்று மாணவர்களுக்கு சாமர்த்தியமான செயல்களால் மற்றவர்கள் மனதில் இடம் பிடிப்பீர்கள். பாடங்களில் கவனம் செலுத்துவது அதிகரிக்கும். மன தைரியம் கூடும்.

தன்னம்பிக்கை அதிகரிக்கும். எந்த நேரத்திலும் அனைவருக்கும் உதவும் எண்ணம் தோன்றும். சில நேரங்களில் கொஞ்சம் கடுமையாக நீங்கள் உழைக்கக் கூடும். உடல் உழைப்பினால் உற்சாகம் கொஞ்சம் கம்மியாகத்தான் இருக்கும். சரியான நேரத்திற்கு மட்டும் உணவு எடுத்துக் கொள்ளுங்கள் அது போதும். அதே போல வெளியிடங்களுக்கு செல்லும்போது பொருட்கள் மீது கவனமாக இருங்கள். வெளியூர் பயணத்தின் போது வீண் அலைச்சலை தயவு செய்து தவிர்த்து விடுங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமுமே ரொம்ப நல்ல படியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்ட எண் : 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் பச்சை நிறம்

Categories

Tech |