Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தீவிர வாக்கு எண்ணிக்கை…. மாவட்ட ஆட்சியரின் அதிரடிஆய்வு ….!!

மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி வாக்கு எண்ணும் மையத்தை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூரில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி நேரில் சென்று ஆய்வு செய்தார். அதில் நகராட்சி ஆணையர் நித்யா, கோட்டாட்சியர் புஷ்பா, வட்டாட்சியர் சீதாலட்சுமி, தேர்தல் வட்டாட்சியர் ராஜமணி, துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர்  மேகநாத ரெட்டி வாக்கு சாவடியில் அமைக்கப்பட்டுள்ள  கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்துள்ளார். மேலும் மையத்தின்  பாதுகாப்பு குறித்து காவல்துறையினரிடம்  கேட்டறிந்துள்ளார்.

Categories

Tech |