விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று பேச்சிலும் செயலிலும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய நாளாக இருக்கும். உணர்ச்சிவசப்படாமல் இருந்தால் உறவினர் பகை ஏற்படாமல் இருக்கும். விரும்பிய பயணம் விலகிப் போகலாம். விரயங்கள் உண்டாகும். இன்று பணவரவு திருப்தியை கொடுக்கும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். தோழிகளுடன் சுமுகமாக பேசி பழகுவது நல்லது. சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். கொடுக்கல் வாங்கலில் கவனம் இருக்கட்டும்.
பணவரவு திருப்திகரமாக இருக்கும். அது மட்டுமில்லாமல் சுய தொழிலில் ஆர்வம் ஏற்படும். தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும். இன்று உங்களுடைய உடலில் வசீகரத் தன்மை கூடும். திருமண முயற்சியில் வெற்றி கிடைக்கும். இன்று மாணவக் கண்மணிகள் கல்விக்காக கடுமையாக உழைப்பார்கள். கல்வியில் நல்ல வெற்றியும் பெறுவார்கள். கொஞ்சம் பாடங்களை படிக்கும்போது எழுதிப் பாருங்கள்.
நினைவில் வைத்துக் கொள்வதற்கு இது உதவும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமுமே ரொம்ப சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் இளம் மஞ்சள் நிறம்