அரசு அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் கிராமத்தில் உள்ள 2 வீட்டில் அனுமதியின்றி பட்டாசு தயார் செய்யப்படுவதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் அந்த வீடுகளில் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் அனுமதியின்றி பட்டாசு தயார்செய்வது உறுதியானது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பட்டாசு தயாரித்த மாரியப்பன், பழனியம்மாள், ஜெயமணி, ஜேக்கப், பாலமுருகன், ரியாஸ் ஆகியோரை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடடத்தினர். அந்த விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த தேன்பழம்,முத்து கிருஷ்ணன் ஆகியோரிடம் வாடகைக்கு வீடு வாங்கி பட்டாசு தயார் செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அதிகாரிகள் அவர்களிடம் இருந்த குழாய்கள், திரிகள் போன்றவற்றை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.