வாலிபரிடம் கத்தியை காட்டி பணத்தை பறிக்க முயன்ற குற்றத்திற்காக 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள மேலகல்கண்டார் கோட்டை பகுதியில் பெயிண்டரான தமிழரசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் சதீஷ்குமார், பரதன், பிரேம்குமார், தங்கசாமி ஆகிய நான்கு பேரும் இணைந்து கத்தியை காட்டி மிரட்டி தமிழரசனிடமிருந்து பணத்தை பறிப்பதற்கு முயற்சி செய்துள்ளனர்.
அவர்களிடமிருந்து தப்பித்து வந்த தமிழரசன் பொன்மலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சதீஷ்குமார், பரதன் பிரேம்குமார், தங்கசாமி ஆகிய 4 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.