தனுசு ராசி அன்பர்களே..!! இன்று நம்பிக்கைகள் நடைபெறும் நாளாக இருக்கும். சொன்ன சொல்லை நிறைவேற்றி காட்டுவீர்கள். முன்னேற்றமான சூழல் ஏற்படும். நல்லவரின் தொடர்பு நீடிக்கும். வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்கள் ஒத்துழைப்பு கொடுப்பார்கள். பிள்ளைகளால் பெருமை சேரும். இன்று புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்கள் மூலம் முன்னேற்றம் காண உதவிகளும் கிடைக்கும்.
எதிலும் கூடுதல் கவனம் செலுத்து மட்டும் நல்லது. காரிய வெற்றி கண்டிப்பாக கிடைக்கும். பணம் சம்பாதிக்கும் திறமை அதிகப்படும். தடைப்பட்டுவந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். செய்தொழிலில் முன்னேற்றம் இருக்கும். இன்றைய நாள் மனம் மகிழ்வாக இருக்கும் மாணவ கண்மணிகளுக்கு நல்ல வெற்றி வாய்ப்புக்கள் கல்வியில் வந்து சேரும்.
ஆசிரியர்களின் ஒத்துழைப்பு, சக மாணவரின் ஒத்துழைப்பு போன்றவை நிகழும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமுமே ரொம்ப சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிஷ்ட எண் : 6 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் பச்சை நிறம்