தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விவரம் தற்போது வெளியாகி வருகிறது. இந்த நிலையில் திருச்சி துவாக்குடி நகராட்சி 5-வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்ட 22 வயது கல்லூரி மாணவி ஸ்னேகா வெற்றி பெற்றுள்ளார்.
இந்த வார்டில் 1,057 வாக்குகள் பதிவான நிலையில், ஸ்னேகா அதில் 495 வாக்குகளை குவித்துள்ளார். இவருக்கு எதிராக போட்டியிட்ட அமமுக வேட்பாளரை தவிர திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் தங்கள் டெபாசிட்டை இழந்துள்ளனர்.