Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அகில இந்திய ஓபன் டென்னிஸ் போட்டி…. வெற்றி பெற்ற வீரர்கள்…. பரிசுகளை வழங்கிய தொழிலதிபர்….!!

அகில இந்திய ஓபன் டென்னிகாய்ட்   போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கலில் வைத்து ஹட்சன் டென்னிகாய்ட்  அகடமி சார்பில் அகில இந்திய ஓபன் டென்னிகாய்ட்  போட்டி நடைபெற்றது. இதில் தொழிலதிபர் இதயம் முத்து, ஹட்சன் அக்ரோ சந்திரமோகன், வீரர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் சப்- ஜூனியர் ஆண்கள் பிரிவில் கார்த்திக் ராஜா முதலிடத்தையும், அஸ்வின் 2-வது இடத்தையும், சப் ஜூனியர் ஆண்கள் இரட்டையர் பிரிவில் கார்த்திக் ராஜா- அஸ்வின் முதல் இடத்தையும், செல்விகாஸ்-அஸ்வந்த் -2வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

மேலும் சப் -ஜூனியர் பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஷனிஸ்   முதலிடத்தையும், வித்யா -வது இடத்தையும் சப் ஜூனியர் பெண்கள் இரட்டையர் பிரிவில் அஸ்விகா முதலிடத்தையும், வித்தியா- கீர்த்தனா 2- வாது இடத்தையும், ஜூனியர் ஆண்கள்  பிரிவில் வினை குமார்-ராவ் முதலிடத்தையும், ஹரி கிருஷ்ணன்-ஜோதி 2-வது இடத்தையும், ஜூனியர் பெண்கள் இரட்டையர் பிரிவில் மகேஸ்வரி- ஹரிணி முதலிடத்தையும், பை வித்தியா-தர்ஷினி இரண்டாவது இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளனர். இதனையடுத்து தொழிலதிபர் இதயம் முத்து வெற்றி பெற்றவர்களுக்கு ரூபாய் 4 லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் பதக்கங்களை வழங்கி பாராட்டியுள்ளார்.

Categories

Tech |