தமிழ்நாடு அரசு பணி தேர்வாணையம் அண்மையில் குரூப்-1 பணிகளுக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. அந்த அறிவிப்பில் 69 காலிப் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு ஏராளமானோர் விண்ணப்பித்து இருந்த நிலையில் அவர்களுக்கான முதல் கட்ட தேர்வானது கடந்த 03/01/2021 ம் தேதி நடைபெற்றது. இதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 2ஆம் கட்ட தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று தாக்கம் காரணமாக தேர்வு நடத்தப்படாமல் இருந்தது. தற்போது 2ஆம் கட்ட தேர்வு (Mains Exam) நடைபெறும் தேதி தொடர்பான அறிவிப்பு அதிகாரபூர்வ தளத்தில் வெளியாகியுள்ளது. இதில் 04/03/2022 முதல் 06/03/2022ம் தேதி வரை Mains தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து Mains தேர்வுக்கு நுழைவு சீட்டு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே நுழைவு சீட்டு வெளியாகும் தேதி தொடர்பான விவரங்களுக்கு எங்கள் வலைதளத்துடன் இணைந்திருங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://apply.tnpscexams.in/secure?app_id=UElZMDAwMDAwMQ==