Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தலைகீழாக கவிழ்ந்த கார்…. வாலிபர்களுக்கு நேர்ந்த கொடூரம்…. நாமக்கலில் பரபரப்பு….!!

கார் கட்டுபாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 4 வாலிபர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை அடுத்துள்ள எல்லிபாளையம் பகுதியில் மதியழகன் என்பவர் வசித்து வருகின்றனர். லாரி அதிபரான இவரது மகன் மெய்யப்பன்(20) கோவையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று மெய்யப்பன் தனது நண்பர்களான கவுதம் (19), நரேந்திரன் (20), சுனில்நாத் (20), கோபி (20) ஆகியோருடன் காரில் புதுச்சத்திரம் அருகே உள்ள  களங்காணியில் வசிக்கும் நண்பர் ஒருவரை பார்ப்பதற்காக சென்றனர்.

அப்போது களங்காணி பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது முன்னாள் சென்று கொண்டிருந்த லாரி திடீரென பிரேக் போட்டதால் கார் திடீரென நிலை தடுமாறி சாலையில் தலைகீழாக கவிழ்ந்துள்ளது. இந்த கோர விபத்தில் காரை ஓட்டி சென்ற மெய்யப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் காரில் இருந்த மற்ற 4 வாலிபர்கள் படுகாயமடைந்த நிலையில் அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து புதுசத்திரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |