Categories
மாநில செய்திகள்

10, 12 ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு விடைத்தாள்கள் திருத்தம்…. ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை போட்ட அதிரடி உத்தரவு…!!!

விடைத்தாள்கள் திருத்தும் ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை கல்வித்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

கொரோனா  வைரஸ் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள், கல்லூரிகள் சரியான முறையில் நடைபெறவில்லை. ஆன்லைன் மூலம் மட்டுமே பாடங்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில் தற்போது  பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன.  பொதுத்தேர்வு எழுதும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு பள்ளிகளில் நேரடியாக நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. இந்த அறிவிப்பின் அடிப்படையில் திருப்புதல் தேர்வுகள் நடந்து முடிந்தது. திருப்புதல் தேர்வுகள் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது.

இந்த தேர்வுகளில் வினாத்தாள்கள் சமூக வலைத்தளத்தில் லீக்கானது. இதனால் திருப்புதல் தேர்வு சாதாரண தேர்வு. இந்த மதிப்பெண் கருத்தில் கொள்ளப்பட மாட்டாது என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளிகளிலேயே விடைத்தாள்கள் பரிமாற்றம் செய்து மதிப்பீடு செய்யும் பணி தொடங்கியுள்ளது. இதுபற்றி பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் கூறியதாவது, “விடைத்தாள் திருத்தும் பணியில் ஆசிரியர்கள்,  மதிப்பெண்கள் மறுகூட்டல் அல்லது மதிப்பெண்கள்  கூடுதலாகவோ , குறைவாகவோ ஏற்படாத வகையில் விடைத்தாள்களை திருத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் மாணவர்கள் வினாக்களுக்கு சரியான பதில் அளிக்காவிட்டாலும் தோல்வி அடையும் வகையில் மதிப்பெண்கள் அளிக்க கூடாது.  அதற்கு மாறாக ஒற்றை இலக்க எண் அடிப்படையில் மதிப்பெண் அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |