மாசி மக பெருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் தரிசனம் பெற்றுள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேதாரண்யத்தில் வேதாரண்யேஸ்வரர் ஆலயம் இருக்கிறது. இந்த ஆலயம் அகத்திய முனிவருக்கு திருமண கோலத்தில் சிவபெருமான் காட்சி கொடுத்த தலம் என கூறப்படுகிறது. இந்நிலையில் வேதாரண்யேஸ்வரர் ஆலயத்தில் மாசி மக பெருவிழா தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதனையொட்டி மலர்களாலும், மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட கேடயத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். இதனையடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு விழா நிறைவடைந்தது.