Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“ஏன் வேலை வாங்கி கொடுக்கல”…. ஊராட்சி தலைவியின் கணவருக்கு கத்திகுத்து…. ராமநாதபுரத்தில் பரபரப்பு….!!

மனைவிக்கு வேலை வாங்கி தராததால் ஆத்திரமடைந்த நபர் ஊராட்சி தலைவியின் கணவரை கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள பாப்பிரெட்டியாப்பட்டி ஊராட்சி தலைவியாக திம்மக்காள் என்பவர் இருந்து வருகிறார். இந்நிலையில் இவரது கணவன் சித்தையன் (55) சம்பவத்தன்று இவர் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தபோது அதே பகுதியை சேர்ந்த செல்வசுப்பிரமணியன்(31) என்பவர் திடீரென சித்தையனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவரது மனைவிக்கு வேலை வாங்கி தராததை கண்டித்து ஆபாசமாக பேசியுள்ளார்.

இதனையடுத்து தகராறில் ஆத்திரமடைந்த செல்வசுப்பிரமணியன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சித்தையனை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மேலும் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சித்தையனை மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் கமுதி காவல்துறையினர் செல்வசுப்பிரமணியனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |