சிறுமியை திருமணம் செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிணத்துக்கடவு பகுதியில் கூலித் தொழிலாளியான மகேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது பள்ளி மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறிவிட்டது. கடந்த நவம்பர் மாதம் யாருக்கும் தெரியாமல் அப்பகுதியில் இருக்கும் கோவிலில் வைத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிறுமியை திருமணம் செய்த குற்றத்திற்காக மகேஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.