மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள சின்ன பெரியாம்பட்டி பகுதியில் பெரியசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது சொந்த வேலை காரணமாக வீட்டிலிருந்து வெளியே புறப்பட்டுள்ளார். இந்நிலையில் பவளத்தானூர் ரவுண்டானா பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த பெரியசாமி மீது அவ்வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் பலமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த முதியவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பெரியசாமி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.