Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடக்கம்

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கவுள்ளது.

நடப்பு ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால்‌ புரோகித்‌ உரையுடன் தொடங்குகிறது.

சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூடி சட்டப்பேரவை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்தலாம் என்பது குறித்து முடிவு செய்து அறிவிக்கப்படும்.

மேலும், குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பிரதான எதிர்கட்சியான திமுக கேள்வி எழுப்பவுள்ளதால், பேரவை சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஊரக உள்ளாசித் தேர்தல் முடிவுக்குப் பிறகு இந்தாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் கூடவுள்ளதால் இந்த பேரவை கூட்டம் பொதுமக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |