வாக்கு எண்ணிக்கை தாமதமானதால் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் 39-வது வார்டிற்கான வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தபால் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணி முதல் 10 மணி வரை நடைபெற்றுள்ளது. மின்னணு வாக்குகள் எண்ணுவதற்கு தாமதம் ஆனது.
இந்நிலையில் 10 மணி அளவில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறை திறக்கப்பட்டு 10:20 வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் முருகேசன், போலீஸ் சூப்பிரண்ட் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அதிரடியாக ஆய்வு செய்துள்ளனர்.