Categories
சேலம் மாவட்ட செய்திகள்

முகநூலில் மலர்ந்த காதல்….. இலங்கை பெண்ணை திருமணம் செய்த தொழிலாளி…. பதிவு செய்வதில் ஏற்பட்ட சிக்கல்…!!

தொழிலாளி முகநூல் மூலம் காதலித்த இலங்கை பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

சேலம் மாவட்டத்தில் உள்ள பஞ்சுகாளிப்பட்டி பகுதியில் விசைத்தறி தொழிலாளியான சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முகநூல் மூலம் இலங்கையை சேர்ந்த நிஷாந்தினி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறிவிட்டது. இவர்கள் ஐந்து ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் நேரில் பார்க்காமல் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தனது தாயுடன் நிஷாந்தினி சுற்றுலா விசாவில் சேலத்திற்கு வந்துள்ளார்.

இதனையடுத்து பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 7-ஆம் தேதி சரவணனும் நிஷாந்தினியும் கோவிலில் திருமணம் செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து தங்களது திருமணத்தை பதிவு செய்வதற்காக காதல் ஜோடி ஓமலூரில் இருக்கும் பதிவு துறை அலுவலகத்திற்கு சென்றுள்ளனர். அப்போது பெண்ணுக்கு தடையில்லா சான்று வழங்க வேண்டும் என கூறிய அதிகாரிகள் அவர்களை திருப்பி அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் சாந்தினியின் சுற்றுலா விசாவும் முடிவடைய இருக்கிறது.

இதனால் நிஷாந்தினி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று மனு அளித்துள்ளார். அதில் பஞ்சுகளிபட்டி பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவரை நான் காதலித்து திருமணம் செய்து கொண்டேன். அதன்பின் திருமணத்தை பதிவு செய்ய தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டும் என பதிவு துறை அலுவலகத்தில் அதிகாரிகள் கேட்டனர். எனவே போலீஸ் துறை மூலம் எனக்கு தடையில்லா சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியுள்ளார்.

Categories

Tech |