மத்திய அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் கொள்கையை எதிர்த்து நாடு முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என வங்கி ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளன.
மத்திய அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் கொள்கையை எதிர்த்து நாடு முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என வங்கி ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளன. இந்த போராட்டம் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து கொரோனா மூன்றாம் அலை காரணமாகவும் மற்றும் 5 மாநில சட்டமன்ற தேர்தல் காரணமாகவும் வேலைநிறுத்தப் போராட்டம் ரத்து செய்வதாக வங்கி ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளது.
மேலும் இதற்கு பதிலாக மார்ச் மாதம் 28, 29 ஆகிய தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் வங்கி ஊழியர்கள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் “மத்திய வர்த்தக சங்கங்கள் துறைசார் கூட்டமைப்புகள் நடத்திய ஆன்லைன்கூட்டத்தில் மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் எல்.ஐ.சி ஊழியர் சங்கமும் 28, 29 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த போராட்டம் எல்.ஐ.சி பங்கு விற்பனை தனியார் மயமாக்கதிற்கானது என்றும் பாலிசிதாரர்களின் நலன் பாதிக்கப்படுவதாகவும் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த இரண்டு ஊழியர்களும் ஒரே நாளில் ஸ்டிரைக்கை அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.