இளம் நிர்வாகி கொலை செய்யப்பட்ட காரணத்தால் ஷிவமொகா நகரப் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு இரண்டு நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஷிவமொகா நகரில் பஜ்ரங் தளம் அமைப்பு சேர்ந்தவர் இளம் நிர்வாகி ஹர்ஷா. இவர் நேற்று முன்தினம் இரவில் வெட்டி கொல்லப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படுகொலைக்கு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்த நிலையில், அங்கு ஏராளமான போலீசார் வன்முறை ஏற்படாமல் தடுக்கும் வகையில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனை அடுத்து ஷிவமொகா நகரப்பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரண்டு நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனால் மக்கள் நடமாட்டம் காலை 6 மணியிலிருந்து இரவு 9 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் வெள்ளிக்கிழமை காலை வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும், மேலும் அதுவரையிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக துணை கமிஷனர் அறிவித்துள்ளார்.