மத்திய அரசு ஊழியர்களுக்கு 10,000 ரூபாய் அட்வான்ஸ் தொகை வழங்க உள்ளதாக மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு மற்றும் அகவிலைப்படி நிலுவைத் தொகைகாகவும் அரசு ஊழியர் காத்திருக்கின்றனர். இதற்கிடையே பணவீக்கம் கடுமையாக உயர்ந்துள்ளது. அதனால் அதற்கான தேவை முன்பை விட அதிகமாகியுள்ளது. இதற்கு இடையில் மார்ச் மாதம் ஹோலி பண்டிகையையொட்டி சிறப்பு பண்டிகை அட்வான்ஸ் திட்டத்தை அரசு அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சிறப்பு பண்டிகை அட்வான்ஸ் திட்டத்தின்கீழ் ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம் மார்க்கெட்டில் டிமாண்டையும் ஊக்குவிக்கமுடியும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். எனவே கடந்த மார்ச் மாதம் இதே சிறப்பு பண்டிகை அட்வான்ஸ் திட்டம் ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் அதே திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் ஊழியர்கள் பெரும் அட்வான்ஸ் தொகைக்கு வட்டி கிடையாது. மேலும் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒட்டுமொத்தமாக சுமார் 4,000 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.