தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதற்கிடையே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலால், மின் சாதனங்களில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிக்கான, மின் தடை நிறுத்தப்பட்டிருந்தது. தேர்தல் நிறைவடைந்ததையொட்டி மேலும் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மீண்டும் குறிப்பிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
அந்த வகையில் திருப்பூர் மாவட்டம் அருள்புரம் , சந்தைப்பேட்டை , கலெக்டர் அலுவலக துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி கள் நடைபெற உள்ளதால் இந்த துணை மின் நிலையங்களில் நாளை ( பிப்.24 ) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை துைண மின் நிலையங்களுக்கு உட்பட்ட கீழ்கண்ட இடங்களில் மின் வினியோகம் இருக்காது.
அதேபோல அருள்புரம் துணை மின் நிலையத்துக்குட்பட்ட அருள்புரம் , தண்ணீர்பந்தல் , கணபதிபாளையம் , குங்குமபா ளையம்பிரிவு , பல்லடம்ரோடு , உப்பிலிபாளையம் , அண்ணா நகர் , லட்சுமி நகர் , சென்னிமலைபாளையம் , பாச்சாங்காட்டுபாளையம் , செந்தூரன்காலனி , குன்னாங் கல்பாளையம் , திருமலைநகர் , அய்யாவு நகர் , நொச்சி பாளையம் , நொச்சிபாளையம் வாய்க்கால் மேடு , சிந்து கார்டன் , சரஸ்வதி நகர் பகுதியில் மின் வினியோகம் இருக்காது.
சந்தைப்பேட்டை துணை மின்நிலையத்துக்குட்பட்ட அரண்மனைப்புதூர் , தட்டான்தோட்டம் , எம். ஜி. புதூர் , கரட்டாங்காடு , அரசு மருத்துவமனை , ஷெரிப்காலனி , மருத்துவமனை தாராபுரம் ரோடு , பல்லடம் ரோடு , தென்னம்பாளையம் , கல்லாங்காடு , வெள்ளியங்காடு , கே. எம். நகர் , கே. எம். ஜி. நகர் , பட்டுக்கோட்டையார் நகர் , திரு. வி. க. நகர் , கருப்பகவுண்டம்பாளையம் , கோபால் நகர் , பெரிச்சிபாளையம் , கருவம்பாளையம் , ஏ. பி. டி. நகர் , கே. வி. ஆர். நகர் , பூச்சக்காடு , மங்கலம் ரோடு , பெரியார் காலனி , சபாபதிபுரம் , வாலிபாளையம் , ஊத்துக்குளி ரோடு , யூனியன் மில் ரோடு , மிஷன் வீதி , காமராஜ் ரோடு , புதுமார்க்கெட் வீதி , ராயபுரம் , ஸ்டேட் பேங்க் காலனி , காதர்பேட்டை , செட்டிபாளையம் , பழவஞ்சிப்பா ளையம் , சந்திராபுரம் , புதூர் மெயின் ரோடு , தாராபுரம் ரோடு ஆகிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது.
,
கலெக்டர் அலுவலக துணை மின் நிலையத்துக்குட்பட்ட பூம்புகார் நகர் , இந்திரா நகர் , கலெக்டர் அலுவலக வளாகம் , பல்லடம் ரோடு , வித்யாலயம் , பாரதிநகர் , குளத்துப்பாளையம் , செல்வலட்சுமி நகர் , வீரபாண்டி , பொது சுத்திகரிப்பு நிைலய பகுதிகள் , கே. ஆர். ஆர். தோட்டம் ஆகிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது.
உடுமலையை அடுத்துள்ள கிளுவங்காட்டூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் கோவிந்தாபுரம், அமராவதி நகர், செக்போஸ்ட், பெரும்பள்ளம், சாயப்பட்டறை, மானுப்பட்டி, சைனிக் பள்ளி, தும்பலப்பட்டி, ஆண்டியகவுண்டனூர், ஆலாம்பாளையம், கரட்டு மேடு, எலையமுத்தூர், கிளுவங்காட்டூர், குருவப்பநாயக்கனூர், ஜக்கம்பாளையம், பெரிசனம்பட்டி, குட்டியகவுண்டனூர் ஆகிய பகுதிகளில் இன்று (பிப்ரவரி 23) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
தேனி மாவட்டம் பெரியகுளம் உபமின்நிலையத்தின் கட்டுப்பாட்டிலுள்ள கிழக்கு பெரியகுளம் பிரிவில் உயா்மின் அழுத்த கம்பிகள் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதற்காக எ.புதுப்பட்டி, எண்டப்புளி, எ. காமாட்சிபுரம், வேல்நகா், அழகா்நாயக்கன்பட்டி, நல்லகருப்பன்பட்டி, டி. வாடிப்பட்டி, தண்ணீா் பந்தல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்றும், நாளையும் காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.