Categories
தேசிய செய்திகள்

மாணவர்களுக்கு மதிய உணவு திட்டம்…. எப்போது தெரியுமா…? மாநில அரசு புதிய அறிவிப்பு…!!

டெல்லியில் 100 சதவீதம் மாணவர்கள் வருகை புரிந்து பள்ளிகள் செயல்பட அனுமதி கொடுத்தவுடன் மதிய உணவுத் திட்டத்தை தொடங்குமாறு பள்ளி நிர்வாகங்களுக்கு அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா  மூன்றாம் அலைதொற்று காரணமாக கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில், தற்போது பாதிப்பு படிப்படியாகக் குறைய தொடங்கியுள்ளது. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதத்தில் டெல்லியில் மூடப்பட்ட பள்ளிகள் அனைத்தும் பிப்ரவரி 7 முதல் நேரடி வகுப்புகள் மூலம் மீண்டும் பள்ளிகள்  திறக்கப்பட்டன.

மேலும் இதனையடுத்து நர்சரி முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பிப்ரவரி 14 ஆம் தேதி முதல் ஆப்லைன் வகுப்புகள் மீண்டும் ஆரம்பமானது. இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவை வழங்குவது குறித்து எழுப்பப்பட்டு வரும் வினாக்களுக்கு, 100% மாணவர்கள் முழு வருகையுடன் பள்ளிகள் செயல்பட அனுமதிக்கப்பட்ட உடன் இந்த திட்டத்தை மீண்டும் பள்ளிகளில் தொடங்கலாம் என்று விளக்கமளித்துள்ளது.

டெல்லி பள்ளிகளில் மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் வழக்கமான செயல்பாடுகளுடன் மீண்டும் தொடங்கும் போது சூடான மதிய உணவை வழங்குவது மறுதொடக்கம் செய்வதற்கான எந்த காரணமும் இல்லை என DRRAA  சட்ட அறிவிப்பில் வெளியிட்டுள்ளது. அந்த வகையில் பள்ளிகளில் மதிய உணவை மீண்டும் தொடங்க அரசுக்கு டெல்லி ரோசி ரொட்டி அதிகார் அபியான் (DRRAA) நோட்டீஸ் அனுப்பியதை அடுத்து இந்த முடிவு எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |