நேற்று தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இந்த நிலையில் கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சியின் 4-வது வார்டில் வாக்கு எண்ணிக்கையின் போது வாக்குப்பதிவு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டது.
இதனால் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டு, அந்த வார்டில் நாளை (பிப்.24) மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் நடைபெறும் அன்றே ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.