Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“அவரை கைது பண்ணுங்க ” ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் போராட்டம்…. தஞ்சையில் பரபரப்பு…!!

மத்திய மந்திரியின் மகனை கைது செய்ய வலியுறுத்தி ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையம் அருகில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கண்ணன் தலைமையில் போராட்டம் ஒன்று நடத்தியுள்ளனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர்  கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் என பலர் கலந்துகொண்டுள்ளனர். இந்நிலையில்  உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்கிம்பூர் பகுதியில் விவசாயிகள் போராட்டம்  நடத்தியுள்ளனர்.

அந்த போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது மத்திய மந்திரி அஜய் மிஸ்ரா டேனியின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா போராட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் மீது தன்னுடைய காரை ஏற்றி  படுகொலை செய்துள்ளார். இந்நிலையில் ஆஷிஸ் மிஸ்ராவை காவல்துறையினர் கைது செய்து  சிறையில் அடைத்துள்ளனர். ஆனால் தற்போது  நீதிமன்றம் ஆஷிஸ் மிஸ்ராவை ஜாமீனில் விடுதலை செய்துள்ளது. இந்த விடுதலையை தடை செய்து ஆஷிஸ்  மிஸ்ராவை கைது செய்ய வேண்டுமெனவும் மற்றும் வேளாண்மை பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும் என இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து  ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |