Categories
மாநில செய்திகள்

ரெரா பதிவு: இனி பழைய மனைகளுக்கு வேண்டாம்….. வெளியான அதிரடி அறிவிப்பு…..!!!!!

பழைய மனைப் பிரிவுகளில் உள்ள மனைகளை விற்பனை செய்ய ரெரா’ எனப்படும் ரியல் எஸ்டேட் ஆணைய பதிவு அவசியமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் வீடு, மனை விற்பனையை முறைப்படுத்தும் வகையில் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் 2017-ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. அதாவது 8 வீடுகள், மனைகள், அதற்கு மேற்பட்ட திட்டங்கள், இந்த ஆணையத்தில் பதிவு செய்வது கட்டாயம் ஆகும். அந்த வகையில் கட்டுமான நிறுவனங்கள் புதிய குடியிருப்பு திட்டங்களை இந்த ஆணையத்தில் பதிவு செய்தன. ஆனால் வீட்டு மனைகள் விற்பனை செய்யும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களானது ஆணையத்தில் பதிவு செய்ய முன்வரவில்லை.

இது குறித்து ரியல் எஸ்டேட் ஆணைய அதிகாரிகள், பதிவுத்துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தனர். ஏனெனில் பதிவுத்துறை அலட்சியம் காட்டியதால் தமிழக அரசிடம் ரியல் எஸ்டேட் ஆணையம் புகார் செய்தது. இதையடுத்து தலைமை செயலர் அறிவுறுத்தலின்படி பதிவுத்துறை இதற்கான உத்தரவுகளை பிறப்பித்தது. அதன்படி ரியல் எஸ்டேட் ஆணைய பதிவு சான்று இல்லாத வீட்டுமனைகளை பத்திரப்பதிவு செய்ய தடை விதிக்கப்பட்டது.

இது தொடர்ப்க இந்திய கட்டுனர் வல்லுனர் சங்க மாநில செயலர் ராமபிரபு கூறியதாவது, ரியல் எஸ்டேட் ஆணைய சான்று இல்லாத மனைகளை பதிவு செய்ய ஒட்டுமொத்தமாக தடை விதிக்கப்பட்டதாக குழப்பம் நிலவுகிறது. இதற்கிடையில் சார்- பதிவாளர்களுக்கு இதில் தெளிவான வழிகாட்டுதல் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் சார்-பதிவாளர் ஒருவர் பதிவுக்கு வந்த பத்திரம் குறித்த விளக்கம் கேட்டு, ரியல் எஸ்டேட் ஆணையத்துக்கு கடிதம் எழுதினார்.

இதற்கு ஆணையம் அளித்துள்ள பதிலில், 2017 மே 1-க்கு முன் அங்கீகாரம் பெற்ற மனைப் பிரிவுகளுக்கு ஆணைய பதிவு சான்று கட்டுப்பாடு பொருந்தாது என கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக 2017 மே மாதத்துக்கு பிறகு அங்கீகாரம் பெற்ற மனை வாங்குவோருக்கு மட்டுமே ரியல் எஸ்டேட் ஆணைய சான்று பெற்றால் போதும் என்பது தெளிவாகிறது. இதனை பதிவுத்துறை அதிகாரிகள் வெளிப்படையாக தெரிவித்தால் பத்திரப்பதிவு குழப்பம் தவிர்க்கப்படும் என்று அவர் கூறினார்.

Categories

Tech |