Categories
உலக செய்திகள்

சீக்கிரமா வெளிய வாங்க…. அச்சுறுத்தல்களை சந்திக்கும் தூதர்கள்…. பிரபல நாட்டு வெளியுறவு அமைச்சகத்தின் முடிவு….!!!….!!!

அச்சுறுத்தல் காரணமாக உக்ரைனில் இருந்து ரஷ்யா தனது தூதரக அதிகாரிகளை வெளியேற்ற முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உக்ரைன் நாடு முன்னாள் சோவியத்  ஒன்றிய நாடாகும். தற்போது உக்ரைன் நோட்டா அமைப்பில் இணைவதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் உக்ரைன் நாட்டு எல்லையில் சுமார் ஒன்றரை லட்சம் படை வீரர்களை குவித்து வைத்துள்ளது. இதனால் ரஷ்யா எந்த நேரத்திலும் உக்ரைனுக்குள் நுழைந்து அந்நாட்டை ஆக்கிரமிக்கலாம் என அமெரிக்கா மற்றும்  ஐரோப்பிய நாடுகளும் தொடர்ந்து எச்சரித்து வருகின்றன. இந்நிலையில் கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்களின்  கட்டுப்பாட்டிலுள்ள லுகன்ஸ் பகுதிகளை தனி நகரங்களாக ரஷ்யா நேற்று அங்கீகரித்துள்ளது.

இதனால் அப்பகுதிகளில் படைகளை களமிறக்க ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து ரஷ்யா தனது படைகளை அப்பகுதியில் நிலை நிறுத்தியுள்ளது. இந்த செயலுக்கு உலக நாடுகள் அனைத்தும் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் போர் அச்சுறுத்தல் காரணமாக உக்ரைனில் இருந்து ரஷ்யா தனது தூதரக அதிகாரிகளை வெளியேற்ற முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உக்ரைனில் உள்ள ரஷ்ய தூதர்கள் பலர் அச்சுறுத்தல்களை சந்தித்து அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சகம் வருவதாக தெரிவித்துள்ளது.

Categories

Tech |