தேசிய கல்வி கொள்கை குறித்து தமிழக அரசின் நிலைப்பாடு விரைவில் ஒன்றிய அரசுக்கு அனுப்பப்படும் என அமைச்சர் க.பொன்முடி தெரிவித்துள்ளார்.
தேசிய கல்வி கொள்கை குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ள அரசுக்கு குறைந்த கால அவகாசம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. தேசிய கல்வி கொள்கை ‘அனைவருக்கும் கல்வி’ என்ற தமிழகத்தின் நிலைப்பாட்டை சீர்குலைக்கும் வகையில் உள்ளதால் தமிழக அரசு அதனைத் தொடர்ந்து எதிர்த்து வருகிறது. பட்டப்படிப்பு படிக்க முதல்நிலை தகுதிகளை மாணவர்கள் நிறைவு செய்திருக்க வேண்டும் என வரைவுக்குழுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொறியியல் படிப்புகளில் கிராமப்புற மாணவர்கள் நுழைய தடையாக உள்ளதால் நுழைவுத்தேர்வை அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி ரத்து செய்துள்ளார். இலவச கல்வியை கிராமப்புற மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு உள்ளிட்ட சமூக நீதி உத்தரவுகளால் அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் கல்வி தமிழக அரசால் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிக்க நுழைவுத் தேர்வு கட்டாயம் என்பதை திமுக தொடர்ந்து கண்டித்து வருகிறது. தற்போதுள்ள10+2+3 எந்த கல்வி முறையை மாற்றக் கூடாது என்பதே தமிழகத்தில் நிலைப்பாடாகும்.
மேலும் தேசிய கல்வி கொள்கை முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு நிறுத்தினால் சான்றிதழ், இரண்டாம் ஆண்டில் நிறுத்தினால் டிப்ளமோ ,மூன்றாம் ஆண்டு முடித்தால் பட்டம் என்பது இடைநிற்றலை ஊக்குவிக்கும். நான்காமாண்டு இளநிலை பட்டம் என்பது ஏற்புடையது அல்ல . மேலும் மூன்றாம் ஆண்டு வரையில் சராசரி ஒட்டுமொத்த அதரபள்ளி 7.5 சதவீதம் குறைவாக இருந்தால் நான்காம் ஆண்டு செல்ல இயலாது என்பது இயற்கை நீதிக்கு புறம்பானது.
ஒரு பருவத்தில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெறாத மாணவர்கள் அடுத்த பருவத்தில் அனுமதிக்கப்படாமல் தற்காலிக நிறுத்தம் செய்யப்படும். அதனால் மாணவர்கள் கற்கும் காலம் நீட்டிக்கப்படும் இது அவர்களின் பயிலும் ஆர்வம் குறைந்து இடைநிலை அதிகரிக்கிறது. இதன் காரணமாக தமிழ்நாடு அரசு இதனை எதிர்க்கிறது. இது ஒன்றிய அரசு அறிமுகப்படுத்திய முறை ‘நீட் தேர்வு’ முறையை விட கொடுமையானது மேலும் நூறு ஆண்டுகளாக உழைத்து உருவாக்கிய கல்வி அமைப்பை சீர்குலைக்கும் செயலாக அமைகிறது. கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கு குழு அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். இந்நிலையில் அதற்கான பணிகளும் நடந்து வருகின்றன என அமைச்சர் க.பொன்முடி தெரிவித்துள்ளார்.