Categories
கல்வி பல்சுவை மாவட்ட செய்திகள்

BREAKING: TNPSC தேர்வில் முறைகேடு ? விசாரணை தொடக்கம் ….!!

குரூப் 2 தேர்வில் முறைகேடு நடந்தது தொடர்பாக அதன் விசாரணை TNPSC தொடங்கியுள்ளது.

கடந்தாண்டு குரூப் 4 தேர்வு 5,575 மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வை 16,29,865 பேர் எழுத அனுமதிக்கப்பட்டனர். தேர்வில் ஒரே மாவட்ட தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் தரவரிசையில் முதல் 100 இடங்கள் பிடித்துள்ளது சர்சையை ஏற்படுத்தியுள்ளது. சம்மந்தப்பட்ட மையத்தில் தேர்வு எழுதியவர்கள் அனைவருமே அந்த பட்டியலில் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் இராமநாதபுரம் மாவட்டத்தின் ராமேஸ்வரம் , கீழக்கரை ஆகிய தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் என்று  தெரியவந்துள்ளது.

இந்த இரண்டு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் எப்படி ஒரே மாதிரி அடுத்தடுத்து 100 இடங்களை பிடிக்க முடியும் என்று சந்தேகம் எழுந்துள்ளது. ஒரே மாவட்ட தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர்கள் அடுத்தடுத்து 100 இடங்களை பிடித்தது தேர்வர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் TNPSC இதற்கான விசாரணையை தொடங்கியுள்ளது.

அதே போல 2017-18_ஆம் ஆண்டில் நடந்த குரூப் 2ஏ தேர்விலும் 30_க்கும் மேற்பட்டோர் 50 இடங்களுக்குள் வந்தது எப்படி என்றும்  TNPSC விசாரணை மேற்கொண்டு வருகின்றது. மேலும்  ராமேஸ்வரம் , கீழக்கரை மையங்களில் குரூப் 4 தேர்வெழுதிய 19 பேர் முதல் 19 இடத்தை பிடித்தது எப்படி ? என்று TNPSC விசாரணை நடத்தி வருகின்றது.TNPSC குரூப் 4 , குரூப் 2ஏ தேர்வுகளின் பதிவு எண் , விடைத்தாள்களை ஆய்வு செய்கிண்டோம் என்று TNPSC செயலாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |