வாடகை பணம் செலுத்த தவறியதால் கோவிலுக்கு சொந்தமான கிளப்புக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள மயிலாப்பூர் பகுதியில் கபாலீஸ்வரர் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான கடைகள் மற்றும் வீடுகளுக்கு 3 வருடங்களுக்கு ஒரு முறை வாடகை நிர்ணயிக்கப்படுகிறது. இதனையடுத்து கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான கிளப் ஒன்று மனைமரப்பு பகுதியில் செயல்பட்டு வருகிறது.
இந்த கிளப்புக்கு நியமிக்கப்பட்ட வாடகை பணத்தை அவர்கள் தராததால் கோவில் நிர்வாகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அதன்பிறகு கிளப் நிர்வாகிகள் 1 கோடி ரூபாயை கோவில் நிர்வாகத்திடம் கொடுத்துள்ளனர். இருப்பினும் ரூபாய் 4 கோடியே 7 லட்சத்து 86 ஆயிரத்து 431 ரூபாய் பாக்கி பணம் தர வேண்டியுள்ளது. இதன் காரணமாக அதிகாரிகள் மயிலாப்பூர் கிளப்புக்கு சீல் வைத்துள்ளனர்.