சென்னையில் நடைபெற்ற வாக்குப்பதிவின்போது ஒருவரை தாக்கியதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 அதிமுகவினர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவர் கொடுத்த புகாரின்படி ஜெயக்குமார் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். முன்பாக உள்ளாட்சித் தேர்தலில் திமுக நிர்வாகியை தாக்கியதாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ஜெயக்குமார் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது ஜெயகுமாரின் ஜாமீன் மனு இன்று(பிப்…23) விசாரணைக்கு வந்த நிலையில் ,மேலும் ஒரு வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 2-வது வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு மார்ச் 9 வரை நீதிமன்ற காவல் விதித்து ஜார்ஜ்டவுன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது…