தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 21 மாநகராட்சிகளுக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் அனைத்து மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகராட்சியை சுயேட்சைகளின் ஆதரவால் திமுக கைப்பற்றியுள்ளது.
வந்தவாசி நகராட்சியில் மொத்தம் உள்ள 24 வார்டுகளில் திமுக 9 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. இதையடுத்து சுயேட்சையாக போட்டியிட்டு வென்ற 10 பேரில் 6 பேர் ஆதரவு தந்தால் நகராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது.