Categories
தேசிய செய்திகள்

சி.ஏ.ஏ-வில் இஸ்லாமியர்களை நீக்கியது தவறு – மத்திய அமைச்சரிடம் நேரடி எதிர்ப்பை தெரிவித்த கேரள எழுத்தாளர்.!!

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தில் இஸ்லாமியர்களை மட்டும் தவிர்துள்ளதில் தனக்கு உடன்பாடில்லை என மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜுவிடம் கேரள எழுத்தாளர் ஜார்ஜ் ஓனக்கூர் தெரிவித்துள்ளார்.

மத்திய பாஜக அரசு சார்பில் கொண்டுவரப்பட்ட குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக நாடு முழுவதும் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மாணவர்கள், பொதுமக்கள், எதிர்கட்சிகள் என பல தரப்பினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், சட்டத் திருத்தம் குறித்த விழிப்புணர்வு பரப்புரையை பாஜக மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது.

இச்சட்டத்திற்கு எதிராக கேராளவில் ஆளும் கட்சியான கம்யூனிஸ்ட், எதிர்கட்சியான காங்கிரஸ் இரண்டும் எதிர்ப்பு காட்டிவரும் நிலையில் அம்மாநிலத்தில் சட்டம் குறித்த விளக்கப் பரப்புரையை மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு மேற்கொண்டுள்ளார்.

அதன் ஒரு பகுதியாக கேரளாவின் புகழ்பெற்ற எழுத்தாளரான ஜார்ஜ் ஓனக்கூரையை அவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை கிரண் ரிஜிஜு சந்தித்தார். இச்சந்திப்பின்போது மத்திய அமைச்சரிடம் ஜார்ஜ் ஓனக்கூர், இச்சட்டத்தில் இஸ்லாமியர்களை மட்டும் தவிர்த்துள்ளதில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும் ஒரு குறிப்பிட்ட சமூக மக்களை மக்களை மட்டும் நீக்கி வைத்துள்ளது தவறான நடைமுறை எனவும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

இந்தச் சந்திப்புக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கிரண் ரிஜிஜு, ஜனநாயகத்தில் அனைவரும் தங்கள் கருத்துகளைச் சுதந்திரமாக வெளிப்படுத்தலாம் என்றும் எதிர்தரப்பின் பேச்சைக் கேட்க அரசு என்றும் தயாராக உள்ளது எனவும் தெரிவித்தார்.

Categories

Tech |