Categories
உலக செய்திகள்

“இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்!”… ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்த கனடா…!!!

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ரஷ்யா மீது பொருளாதார தடை விதிப்பதாக அறிவித்துள்ளார்.

உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் கிளர்ச்சியாளர்கள் ஆக்கிரமித்துள்ள லுகன்ஸ்க் மற்றும் டுனெட்ஸ்க் இரண்டு மாகாணங்கள் தனி நகர்களாக அறிவிக்கப்படும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறியிருக்கிறார். இதனால், உக்ரைன் பிரச்சனை மேலும் அதிகரித்திருக்கிறது. அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் இதனை கடுமையாக எதிர்த்துள்ளன.

உக்ரைன் நாட்டில் இருக்கும் ரஷ்யா சார்ந்த பிராந்தியங்கள் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்திருக்கிறார். இந்நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோவும் ரஷ்ய நாட்டிற்கு எதிராக பொருளாதார தடைகளை விதித்திருக்கிறார்.

இதுபற்றி, அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, உக்ரைன் நாட்டில் ரஷ்யா சட்டவிரோதமாக நடவடிக்கைகள் மேற்கொள்வது ஜனநாயகத்தின் மீது நடத்தும் தாக்குதல். மேலும் இது, உலக நாடுகள் முழுக்க அமைதிக்கான அச்சுறுத்தல். இதுமட்டுமன்றி இறையாண்மை அரசாங்கத்தின் மீது நடத்தப்படும் படையெடுப்பு.

எனவே, தங்கள் நட்பு நாடுகளுடன் சேர்ந்து கனடா, முதல் சுற்று பொருளாதார தடையை விதிக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

 

Categories

Tech |