தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 2 ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை பிப்ரவரி 23 (இன்று) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதாக அறிவிக்கப்பட்டது. டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2A ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கான அறிவிப்பு பிப்ரவரி மாதத்தில் வெளியிடப்படும் எனவும் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு மார்ச் மாதம் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது..
இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 குரூப் 2A தேர்வுகளுக்கான அறிவிப்பாணை சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. மே 21-ஆம் தேதி நடைபெற உள்ள குரூப்-2, குரூப் 2A தேர்வுகளுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தேர்வுகள் இன்று(பிப்..23) முதல் மார்ச் 23-ம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம். போட்டித் தேர்வுக்கான முடிவுகள் ஜூன் மாதம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது…