திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரம் உடுமலை சாலையில் பள்ளிக் குழந்தைகள் ஏற்றிச்சென்ற வாகனத்தின் டயர் கழன்று சாலையில் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். அதாவது, திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உடுமலை சாலையிலிருந்து பொள்ளாச்சி சாலையில் உள்ள பொண்ணாபுரம் பகுதியை நோக்கி வந்த விவேகம் மேல்நிலைப்பள்ளி பள்ளி வேன் டயர் திடீரென்று கழன்று ஓடியது.
இதனால் 15-க்கும் மேற்பட்ட குழந்தைகள் லேசான காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் பெற்றோர்களை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. இச்சம்பவத்தின் சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியாகியுள்ளது. இதையடுத்து வட்டார போக்குவரத்து அலுவலர் தாராபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளில் உள்ள வாகனங்களை சோதனை மேற்கொண்டு தரச் சான்றிதழ் வழங்க வேண்டும்” என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்…