Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் 9 ஆம் தேதி வரை நடைபெறும்.!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 9 ஆம் தேதி வரை நடத்த அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக 15ஆவது சட்டப்பேரவையின் 8ஆவது கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்த புத்தாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்று உரையாற்றினார். அப்போது உரையின் இடையே குடியுரிமை திருத்த சட்ட மசோதா குறித்து விவாதிக்க வேண்டுமென்று என்று வலியுறுத்தி திமுக தலைவர் முக.ஸ்டாலின் மற்றும் அக்கட்சி உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

அதை தொடர்ந்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரைக்கு பின், சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த அலுவல் ஆய்வுக் கூட்டத்தில்   வருகின்ற ஜனவரி ஒன்பதாம் தேதி வரை கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆளுநர் உரை மீது 2 நாட்கள் விவாதம் நடைபெறும் என்றும், கூட்டத்தின் கடைசி நாளான 09 ஆம் தேதி ஆளுநர் உரை மீது பதிலுரை நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |