Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி…. தமிழக பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

என்.சி.இ.ஆர்.டி பாடத் திட்டத்தை அமல்படுத்த உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்துள்ளனர்.

தமிழகத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சமச்சீர் கல்வி முறை அமலில் உள்ளது. இப்பள்ளிகளில் படித்து முடிக்கும் மாணவர்கள் தேசிய அளவில் நடத்தப்படும் ஐ.ஐ.டி ரயில்வே உள்ளிட்ட போட்டி தேர்வுகளில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்படுகிறது. இதனால் என்.சி.இ.ஆர்.டி பாடத் திட்டத்தை அமல்படுத்த உத்தரவிடக்கோரி சென்னை அரும்பாக்கத்தை  சேர்ந்த ஜோசப் என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். மேலும் இவ்வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரதசக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மேலும் சமச்சீர் கல்வி திட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்நிலையில் சமச்சீர் கல்வி திட்டம் என்பது அரசின் கொள்கை முடிவு என்றும் விளம்பரத்துக்காக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து எந்த பாடத்திட்டத்தை பின்பற்றுவது பற்றி முடிவு செய்வது அரசின் கொள்கை முடிவாகும். மேலும் இது பற்றி அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் அரசு நிர்வாகத்தை நீதிமன்றம் நடத்த முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் சமச்சீர் கொள்கையை பின்பற்றுவது தொடர்பான அரசு கொள்கை முடிவில் எந்த விதிமுறைகளும் இல்லை என கூறி நீதிபதிகள் இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

Categories

Tech |