Categories
உலக செய்திகள்

அரசியல் தீர்வுகளை காண்பதற்கு…. ரஷ்யா, திறந்த நிலையில் இருக்கிறது… -அதிபர் விளாடிமிர் புடின்…!!!

 ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டத்தில், அரசியல் தீர்வுகளை காண்பதற்காக ரஷ்யா திறந்த நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

உக்ரைன் நாட்டின் பிரச்சனை குறித்து ஐநா பாதுகாப்பு கவுன்சில் இன்று அவசர கூட்டத்தை துவக்கி நடத்திக் கொண்டிருக்கிறது. இதில் ஐக்கிய நாடுகள் சபைக்கான ரஷ்ய நாட்டின் பிரதிநிதியான வாசிலி நெபென்சியா தெரிவித்ததாவது, ரஷ்யா, அரசியல் தீர்வு காண்பதற்காக  திறந்த நிலையில் இருக்கிறது.

எனினும், டான்பாஸில் இரத்த ஆறுக்கு அனுமதி கிடையாது என்று கூறியிருக்கிறார். டான்பாஸ் என்பது, உக்ரைன் நாட்டில் இருக்கும் லுகன்ஸ்க் மற்றும் டுனெட்ஸ்க் ஆகிய பகுதிகளாகும். ரஷ்யாவின் அதிபரான, விளாடிமிர் புடின் குறிப்பிட்டிருப்பதாவது, ரஷ்ய மக்களுக்கு  எதிராக டான்பாஸில் ஒரு போரை உருவாக்க உக்ரைன் திட்டமிட்டிருக்கிறது. மேலும், மேற்கு நாடுகளின் உத்தரவிற்கு ஏற்ப இயங்குகிறது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

Categories

Tech |