தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்குபதிவு எண்ணிக்கை நேற்று (பிப்.22) தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான நடத்தை விதிமுறைகள் உடனடியாக விலக்கிக் கொள்ளப்படுவதாக மாநில தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். மறு வாக்குப்பதிவு நடைபெறும் புவனகிரி பேரூராட்சிப் பகுதிகள் தவிர, மற்ற அனைத்து இடங்களில் தேர்தல் விதிகள் விலக்கிக்கொள்ளப்படுவதாக அறிவித்துள்ளார்..