மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் பகுதியில் சண்முகவேல்- முத்துலட்சுமி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் ராஜபாளையம் காந்தி சிலை அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த லாரி சண்முகவேலின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் முத்துலட்சுமி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் படுகாயமடைந்த சண்முகவேலை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முத்துலட்சுமியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.