பேரூர் பேரூராட்சியில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட தம்பதியினர் வெற்றி பெற்றுள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் 7 பேரூராட்சிகள் அமைந்துள்ளது. இதற்கான ஓட்டு எண்ணிக்கை ஆலாந்துறை அரசு மேல்நிலைப் பள்ளியிலும், மருதமலை தேவஸ்தான பள்ளியிலும் தொடங்கியுள்ளது. இதில் 15 வார்டுகளை கொண்ட பேரூர் பேரூராட்சியில் 12 இடங்களில் தி.மு.க-வும், 1 இடத்தில் காங்கிரஸும் ஆக மொத்தம் 13 இடங்களில் தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள 2 இடங்களில் அ.தி.மு.க வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் 2-வது வார்டில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட அண்ணாதுரையும், 3-வது வார்டில் போட்டியிட்ட அண்ணாதுரையின் மனைவியான ராதாவும் வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.