Categories
அரசியல் மாநில செய்திகள்

சட்ட பேரவையில் வெளிநடப்பு… திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் ரத்து!

திமுகவின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியுள்ளது. பேரவைத் தலைவர் தனபால் தலைமையில் சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக் கூட்டம் இன்று நடத்தப்பட்டு இந்தப் பேரவை எத்தனை நாள்கள் நடத்துவது என்பது குறித்து முடிவுசெய்யப்படும். இந்தச் சட்டப்பேரவையில் திமுகவின் செயல்திட்டம் குறித்து விவாதிப்பதற்காக அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 5 மணிக்கு திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடக்கவிருந்தது.

ஸ்டாலின்

இந்நிலையில், சட்டப்பேரவையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறையிலேயே எம்எல்ஏக்கள் கூட்டத்தை முடித்துவிட்டதால் இன்று மாலை நடக்கவிருந்த கூட்டம் ரத்துசெய்யப்பட்டுள்ளது. சட்டப்பேரவை வளாகத்தில் திமுக எம்ஏல்ஏக்கள் ஆலோசனை நடத்திய நிலையில் கூட்டம் ரத்துசெய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 

Categories

Tech |