மெர்சல் படத்தை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகிவரும் பீஸ்ட் திரைப்படத்தில் விஜய் நடித்து முடித்துள்ளார். காதலர் தினத்தன்று வெளியாகியுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்த பேச்சுகள் தான் இணைய தளம் முழுவதும் வைரலாகி வருகிறது. இந்நிலையில் அரபி குத்து பாடல் பற்றிய புதிய தகவல் வெளியாகியுள்ளது. கோலமாவு கோகிலா, டாக்டர், படங்களைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் பீஸ்ட் படத்தை இயக்கியவர் நெல்சன் டிலிப்குமர். பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.
சமீபத்தில் இப்படத்தில் விஜய் சம்பந்தமான காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு படக்குழுவினர் வெளியிட்டனர். இந்த படத்தில் செல்வராகவன் அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந் நிலையில் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினம் முதல் இந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலித்து வருகிறது. துள்ளலான நடனமும் இசையும் இணைந்து வெளியாகியுள்ள இந்த பாடல் இதுவரை யூடியூபில் நாற்பத்தி ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்து உள்ளது.
இந்நிலையில் இந்த பாடல் படத்தில் இடம் பெறப் போவதில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. டாக்டர் படத்தில் இடம்பெற்ற பிரபலமான செல்லமா பாடல் படத்தின் இறுதியில் வெளியிடப்பட்டது. அதே போன்று இந்த பாடலும் படத்தின் இறுதியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.