உலகத் தானிய சந்தையில் ரஷ்யா உக்ரேன் முக்கிய பங்குதாரர்களாக உள்ள நிலையில் இரு நாடுகளுக்குமிடையேயான போர் பதற்றம் உலகளாவிய உணவு பொருட்களின் விலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
ரஷ்யா உக்ரேன் நாடுகளுக்கிடையே கிருமியா தொடர்பாக பல ஆண்டுகளாக எல்லை பிரச்சினை நீடித்து வருகிறது. இதனையடுத்து ரஷ்யா தங்கள் நாட்டுப் படைகளை உக்ரேனின் எல்லையில் குவித்துள்ளது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவை பலமுறை எச்சரித்துள்ளது. இவ்வாறு இருக்க உலக சந்தையில் ரஷ்யா உக்ரைன் முக்கிய பங்குதாரர்களாக உள்ளார்கள்.
ஆகையினால் ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் பதற்றம் உலகளாவிய உணவுப் பொருட்களின் குறிப்பாக சோளம், சோயா பீன்ஸ் கோதுமையின் விலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து ஐநா சபையின் பொதுச் செயலாளரான ஆண்டனியோ கூறியதாவது, இரு நாடுகளுக்கிடையேயான போர் பதற்றத்தைத் தணிக்க அரசியல் ரீதியான பேச்சுவார்த்தை தேவை என்று தெரிவித்துள்ளார்.